
சென்னையில் கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, இன்று ஒரு சவரன் ரூ.1,06,040-க்கு விற்பனையாகிறது.
இன்று 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கும், வெள்ளி ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனையாகிறது.