
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 'அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டம்' இந்த ஆண்டு செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்திற்காக ரூ.56.72 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், உயர் மதிப்பு வேளாண் திட்டங்களுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் மற்றும் சூரிய சக்தி பம்ப்-செட்களுக்கு 80 சதவீத மானியம் வழங்கப்படும்.
மேலும், வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ரூ.3,000 கோடி குறுகிய கால கடன் மற்றும் மண்வளத்தை பாதுகாக்க ரூ.600 கோடி மதிப்பீட்டில் புதிய இயக்கம் அறிமுகம் செய்யப்படுகிறது.