
ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காகக் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 101 ரன்கள் அடித்து நாட் அவுட்டாக விளங்கினார்.
நம்பர் 7 பேட்ஸ்மேனாக களமிறங்கிய அவர், 172 பந்துகளில் 1 சிக்ஸ் மற்றும் 6 பவுண்டரிகளுடன் இந்த சதத்தை விளாசினார்.
இந்தச் சிறப்பான ஃபார்ம் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் உலகக்கோப்பை திட்டத்திலும் அவர் இடத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.