
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு அருகில் உள்ள மெக்மின்வில் விமான நிலையத்திற்கு அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ஓரிகானை சேர்ந்த விமானி டைலர் ஸ்டர்டேவண்ட், டெக்சாஸை சேர்ந்த பெண் விமான பயிற்றுவிப்பாளர் மேடி ஆஸ்போ மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த பயிற்சி விமானி என 3 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் ஹெலிகாப்டர்கள் நொறுங்கி விவசாய பண்ணை நிலத்தில் விழுந்ததால் அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது.