ஏமனின் அடென் நகரில் உள்ள அதிபர் மாளிகையைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சிக் படையினர் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் பிரதமரின் பாதுகாப்புப் படையினர் 2 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் ஏமன் பிரதமர் ஷயா அல்-சிந்தானி மற்றும் அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக உயிர் தப்பியதாக அந்நாட்டுத் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற ஏமன் அரசுக்கும் ஈரான் ஆதரவு ஹவுதி படைக்கும் இடையே மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தொடர்ந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.