
ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள உணவகத்தில் பெண் ஒருவர் நடத்திய தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவகத்திற்குள் நுழைந்த பெண் வைத்திருந்த பையை காவலாளி சோதனை செய்தபோது வெடிகுண்டு வெடித்துச் சிதறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.