
திராவிடர் கழகம் இன்று (30.07.2026) நடத்தவிருந்த நீட் மற்றும் இடஒதுக்கீடு எதிர்ப்பு வாகனப் பிரசாரத்திற்கு த.வெ.க. அரசு கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்து தடை விதித்துள்ளது.
சென்னை பெரியார் திடலில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அடக்குமுறை அரசியலுக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடகப்பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் வீரமணியின் பரப்புரைப் பயணத்திற்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்றும், ஒன்றிய பா.ஜ.க. அரசை விட த.வெ.க. அரசு அதிகம் மிரள்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.