
அன்னாசியில் உள்ள 'புரோமெலைன்' என்சைம் புரோட்டீனை உடைத்து, செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
வைட்டமின் சி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த அன்னாசி ஜூஸ், சளி, இருமல் மற்றும் மூட்டுவலி போன்ற தசை வலிகளைக் குறைக்க உதவுகிறது.
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும், மாங்கனீஸ் சத்து எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது.