
வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி பெண் செய்தி வாசிப்பாளரை அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி மங்கையர்கரசியும் கைது செய்யப்பட்டு, பெங்களூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.