
திரையுலகிற்கு வந்தபோது தனக்கு வழிகாட்டவோ அறிவுரை கூறவோ ஆதரவளிக்க யாருமில்லை என்று நடிகை சோபிதா துலிபாலா தெரிவித்துள்ளார்.
முதல் திரைப்பட வாய்ப்பைப் பெற பல ஆடிஷன்களில் பங்கேற்றதாகவும், அந்த ஆரம்பக் கட்டம் மிகவும் பயங்கரமான அனுபவமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
திரையுலகம் ஒரு சர்க்கஸ் போன்றது என்றும், நமது திறமைக்கு யாருடைய சான்றிதழும் தேவையில்லை என்பதைப் புரிந்து கொண்ட பிறகு பயம் நீங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.