
கொலம்பியாவின் சோகோ மாகாணத்தில் சான் ஜோஸ் டெல் பால்மருக்கு கிழக்கே 5 கி.மீ. தொலைவில், 107 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளான வெனிசுலா மற்றும் ஈகுவேடாரிலும் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்து பலர் காயமடைந்துள்ள நிலையில், சேத விவரங்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சோகோ மாகாண கவர்னர் கரோலினா தெரிவித்துள்ளார்.