
டெல்லியைச் சேர்ந்த 15 வயது வந்தன் அலங்கார் சவாய், ஆன்லைன் செஸ் தளமான Chess.com-ல் நடந்த போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மாக்னஸ் கார்ல்சனைத் தோற்கடித்தார்.
வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய வந்தன், 50-வது நகர்த்தலில் கார்ல்சன் விலகியதைத் தொடர்ந்து வெற்றியைப் பதிவு செய்தார்.
போட்டியின் 31-வது நகர்த்தலில் இருவரும் தங்கள் ராணிகளை இழந்த நிலையில், வந்தன் தனது திறமையை வெளிப்படுத்தி இந்த வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளார்.