
சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருவதால், இளைஞர்களை ஊக்குவிக்க மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் இரவு விடுதிகள் போன்ற இடங்களில் திருமணத்தை பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில் திருமண பதிவுகள் 7.5 சதவீதம் குறைந்துள்ள நிலையில், ஷாண்டாங் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தியான்ஜின் வங்கி கிளைகளில் பதிவு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
மெட்ரோ நிலையங்கள் மற்றும் பொது பூங்காக்களிலும் திருமண சான்றிதழ் வழங்கும் முறையை சீன அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.