
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் 'வதந்தி' வெப் தொடரின் சீசன் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகிறது.
வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கர் - காயத்ரி தயாரிக்கும் இந்த கிரைம் திரில்லர் தொடரில், சசிகுமார் மூசா ராசா என்ற கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார்.
2022-ம் ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான 'வதந்தி' தொடரின் முதல் பாகம் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.