
சிங்கப்பூர் கணினி நிறுவனமான Infocom Consultants, உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் இலவசமாகத் தமிழ் கற்க 'சொற்கள்' என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
கணிதப் பேராசிரியர் P M A அமானுல்லாஹ் வடிவமைத்துள்ள இந்தத் தளத்தை மொபைல் மற்றும் டேப்லெட் கருவிகள் மூலம் பயன்படுத்தலாம்.
www.sorkkal.com என்ற முகவரியில் உள்ள இந்தத் தளம், அறிமுகமான முதல் வாரத்திலேயே மலேசியா, இந்தியா மற்றும் அமெரிக்க பயனாளர்களை ஈர்த்துள்ளது.