
காவிரியில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள 20 டி.எம்.சி. நீர் பற்றாக்குறையை ஈடுகட்டக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் விக்ரம் நாத், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.