
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு பட்டியலில் வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு பரிசீலித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் சங்கங்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல் மற்றும் ஊதிய திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பணியில் உள்ள 11,773 பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் உட்பட அனைத்து மனுக்களும் பிரத்தியேக மென்பொருள் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.