International
சவுதி அரேபியாவில் 11 கோடி டன் யுரேனியம் தாது கண்டுபிடிப்பு

சவுதி அரேபியாவில் 11 கோடி டன் யுரேனியம் தாது கண்டுபிடிப்பு

Puthiyathalaimurai47m
THE BRIEF
1

சவுதி அரேபியாவில் உள்ள மதீனாவில் சுமார் 11 கோடி டன் யுரேனியம் தாது இருப்பதாக மதீனா ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சவுதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

2

வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி முகமையின் 70-வது பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து விலகி அணுசக்தி கட்டமைப்பை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

3

எனினும், இது யுரேனியத்தின் மொத்த தாது எடையே ஆகும்; தாதுவில் உள்ள யுரேனியத்தின் உண்மையான செறிவு மற்றும் உற்பத்திச் செலவு போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.