
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் நாளை ஆகஸ்ட் 5-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் வினோத் நாளை மறுநாள் ஆகஸ்ட் 6-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.7,000 கோடி வட்டியிலாக் கடன் மற்றும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லாக் கல்விக் கடன் போன்ற திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.