
இந்திய கிரிக்கெட் அணி குறைந்தபட்சம் நான்கு பிரத்யேக பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
அணியின் பேட்டிங் வரிசையை நீட்டிக்க முயற்சிக்கும்போது பந்துவீச்சு பலவீனமடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஒரு வீரரைத் தேடுவதற்குப் பதிலாக வெவ்வேறு பொறுப்புகளைச் செய்யக்கூடிய திறமையான வீரர்களைத் தேட வேண்டும் என்றார்.