
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தகுதித் தேர்வு இன்றி வழங்கப்பட்ட அரசு பணி நியமன ஆணைகளை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் 14 மற்றும் 16-ன் படி, தகுதி வாய்ந்த பட்டதாரிகள் காத்திருக்கும் சூழலில், தகுதியற்றவர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது சட்டத்திற்குப் புறம்பானது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், அவசரப்பட்டு அரசு வேலைகளை வழங்கியது நிர்வாகத் தவறு என நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.