
ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது, அரசகுமார், முத்துக்குமார் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் இருந்த தொடர்புகள், கட்சி நிதி வசூல் விவரங்கள் மற்றும் வங்கிப் பரிமாற்றங்கள் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில்தான் இந்த விசாரணை நடத்தப்பட்டதாகவும், அவரது பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.