
சிங்கப்பூரில் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் அனைத்துலக தமிழ் நாடக திருவிழாவில் மொத்தம் 8 மேடை நாடகங்கள், 6 பயிலரங்குகள் மற்றும் ஒரு கருத்தரங்கு இடம்பெறுகின்றன.
ஆகஸ்ட் 28 அன்று இரவு 7.30 மணிக்கு பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட 'காற்றினிலே வரும் கீதம்' நாடகம் மேடை ஏற்றப்படுகிறது.
இந்த விழாவில் அகம், பிளாக்ஸ்பைஸ், டிரையாங்கிள், ஏகேடி, அதிபதி உள்ளிட்ட உள்ளூர் குழுக்களுடன் சர்வதேச நாடகக் குழுக்களும் பங்கேற்கின்றன.