
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஐடி நிறுவனமான சோஹோவின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, எம்பிஏ கல்லூரிகளை மூட வேண்டும் என்ற கருத்தை ஆதரித்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிரிஸ் மார்கிஸ் எழுதிய கட்டுரையைச் சுட்டிக்காட்டிய அவர், வணிகக் கல்லூரிகள் பொதுவாழ்வில் வர்த்தக நோக்கத்தை மட்டுமே ஊக்குவிக்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா தனது வணிகப் பள்ளிகளை மூடிவிட்டு, அதற்குப் பதிலாக ஸ்டார்ட்அப் இன்குபேட்டர்களில் கவனம் செலுத்துவது அதிக நன்மையைத் தரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.