
ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் 24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு மேல்நிலைக் கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.
2021-ல் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு, ஆறாம் வகுப்புக்கு மேல் பெண்கள் பள்ளிக்குச் செல்லவும், பல்கலைக்கழகங்களில் படிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கல்வி மறுக்கப்பட்ட சிறுமியரின் எண்ணிக்கை தற்போது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.