
பங்களாதேஷின் ரூப்பூர் அணுமின் நிலையத்திற்குத் தேவையான இரண்டாம் கட்ட அணு எரிபொருளைச் சுமந்து சென்ற ரஷிய சரக்கு விமானத்திற்கு பாகிஸ்தான் அரசு தன் நாட்டு வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளது.
தொழில்நுட்ப மற்றும் நடைமுறை சிக்கல்களாலேயே அனுமதி தாமதமானதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
தடையைத் தொடர்ந்து ரஷ்யாவின் 'ரோசாட்டம்' நிறுவனம் மாற்றுப் பாதை வழியாக அக்டோபர் மாதம் முதல் எரிபொருள் விநியோகத்தைத் தொடர திட்டமிட்டுள்ளது.