
இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், தனது கவனம் தொடர்ந்து விளையாடுவதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதிலும் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 14 அன்று தொடங்க உள்ள உத்தரப் பிரதேச டி20 தொடரின் 4-வது சீசனில், லக்னோ ஃபால்கன்ஸ் அணியின் கேப்டனாக புவனேஸ்வர் குமார் செயல்பட உள்ளார்.
24 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 34 போட்டிகள் லக்னோ மற்றும் கான்பூர் மைதானங்களில் நடைபெற உள்ளன.