
தென் கொரியாவின் நம்புரு நகரில் நடைபெற்ற சூப்பர் 300 கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீராங்கனை அஷ்மிதா சலிஹா சாம்பியன் பட்டம் வென்றார்.
பரபரப்பான இறுதிப்போட்டியில் உலகின் 50-வது இடத்தில் உள்ள 26 வயதான அஷ்மிதா, 35-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹான் கியான்சியை (24 வயது) 14-21, 21-14, 21-14 என்ற செட் கணக்கில் 53 நிமிடங்களில் வீழ்த்தினார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஷ்மிதா சலிஹா, தனது சர்வதேச பேட்மிண்டன் வாழ்க்கையில் பி.டபிள்யு.எப். வேர்ல்டு டூர் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.