இரண்டு மாதங்களுக்கு மேல் பணம் செலுத்தப்படாத பிஎஃப் கணக்குகள் செயலற்ற கணக்குகளாக மாறும் என்றும், அவற்றுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு மட்டுமே வட்டி வழங்கப்படும் என்றும் EPFO எச்சரித்துள்ளது.
55 வயதிற்கு முன் ஓய்வு பெற்றவர்கள் 58 வயதிற்குள்ளும், 55 வயதிற்கு மேல் ஓய்வு பெற்றவர்கள் ஓய்வு பெற்ற தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள்ளும் பணத்தை திரும்பப் பெற வேண்டும்.
உறுப்பினர்கள் தங்களின் யுனிவர்சல் கணக்கு எண்ணைப் (UAN) பயன்படுத்தி கணக்கின் நிலையை சரிபார்த்து, KYC விவரங்களை புதுப்பித்து பணத்தை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.