
நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்த அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.
கடந்த 28-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற இரு அணிகளுடன் தலா 2 போட்டிகளில் விளையாடி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தன.