
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டியின்போது அடுத்தடுத்து இரண்டு முறை மின்சாரம் தடைப்பட்டது.
குடியரசுத் துணைத் தலைவரின் வருகையையொட்டி பிற்பகல் 3:30 மணி முதல் ஜெனரேட்டர் மூலமே கோயில் இயங்கியதாகத் தெரிவித்த மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், கோயில் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட உள்சுற்று மின்கோளாறே காரணமென விளக்கமளித்தார்.
மின்தடை ஏற்பட்டவுடன் உடனடியாகச் செயல்பட்டு அடுத்த 2 நிமிடங்களுக்குள் ஜெனரேட்டரிலிருந்து மின்வாரிய மின்சாரத்திற்கு மாற்றி விநியோகம் சீரமைக்கப்பட்டதாக அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.