
அமெரிக்கா, சிரியாவை பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது, 1979 முதல் சிரியா இந்தப் பட்டியலில் இருந்தது.
2024 டிசம்பரில் பஷர் அல் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அகமது அல் ஷரா அதிபரான பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜூலையில் கொண்டு வந்த தீர்மானம் 45 நாட்கள் பரிசீலனைக்குப் பின் அமலுக்கு வந்தது.
இந்த நீக்கம் சிரியாவின் மறுசீரமைப்புப் பணிகளுக்கும், வெளிநாட்டு உதவிகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளுக்கும் வழிவகுக்கும் என சிரிய அதிபர் அகமது அல் ஷரா வரவேற்றுள்ளார்.