
கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டத்தில் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறிய ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக வீரர் தோனி வழக்கு தொடர்ந்தார்.
தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி தோனி தரப்பில் ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது தொடர்புடைய எதிர்மனுதாரர்கள் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் உரிய பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.