/nakkheeran/media/media_files/2026/09/12/cm-vijay-seeman-mic-2026-09-12-16-23-30.jpg)
சென்னை பட்டினப்பாக்கத்தில் 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பட்டினப்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இப்பகுதி கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய ஆபத்தான பகுதியாகவும் மற்றும் எதிர்காலத்தில் கடல்மட்டம் உயர்ந்து வெள்ளம் சூழ் பகுதியாக மாறக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்த முடிவை அரசு கைவிடாவிட்டால், பாதிக்கப்படும் 9 கிராம மீனவ மக்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.