
தமிழ் சினிமாவில் சுமார் 1,000 படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடப்பதாகவும், அதில் 200 படங்கள் நல்ல படங்களாக இருக்கும் என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 'யுவர் பேக்கர்ஸ் பிளே' என்ற ஓ.டி.டி. தளத்தில் சப்ஸ்கிரிப்ஷன் கட்டணம் கிடையாது என்றும், விருப்பமான தொகையை அளிக்கலாம் என்றும் நிறுவனர் கிஷோர் ஆதித்யா கூறினார்.
படத்தின் லாபத்தில் 20 சதவீதம் சினிமா தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் என்ற புதிய ஓ.டி.டி. தளத்தின் அறிவிப்பை பெப்சி அமைப்பு வரவேற்றுள்ளது.