
பழநி மடம் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், உடல்நலக் குறைவு காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேரில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஜஸ்டின் மணிகண்டனுக்கு மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜஸ்டின் மணிகண்டன் சிகிச்சை பெறும் தனி வார்டுக்கு வெளியே இரண்டு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மருத்துவர்கள் அவரது உடல்நிலையை அடிக்கடி கண்காணித்து வருகின்றனர்.