
சர்வதேச வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக பிரிக்ஸ் நாடுகளுக்கென்று தனி நாணயம் உருவாக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகச் செலவைக் குறைப்பதற்காகத் தங்களது சொந்த உள்நாட்டு நாணயங்களிலேயே இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
எல்லை கடந்த பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக 'பிரிக்ஸ் பேமெண்ட் டாஸ்க் போர்ஸ்' சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.