ரூ. 4000 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படத்தின் டிரெய்லர் உலகளவில் ஐந்து இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் சம்பளம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.