
பாலாஜி இயக்கத்தில் கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ்.ஸ்விஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வருகிறது.
இப்படத்தில் சின்னத்திரை நடிகர் சித்து கதாநாயகனாக களமிறங்கியுள்ளார் மற்றும் பிக்பாஸ் புகழ் ரித்விகா, தர்ஷிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்குப் பின் வரும் ஜூன் மாதத்தில் நடக்கும் மர்மமான கொலைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.