முந்தைய தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, சட்டசபை அனுமதி இன்றி ரூ.2,000 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளுக்கு அனுமதி அளித்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஜனவரி 14-ம் தேதியிட்ட அரசாணை மூலம் 80 சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டதாக சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா ஆதாரங்களை முன்வைத்தார்.
இந்த விவகாரத்தை உரிமைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைக்கு, பரிசீலித்து உரிய முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் பிரபாகர் பதிலளித்துள்ளார்.