நேபாளத்தின் திரிபுவன் திரிசூலி பள்ளியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, தலைமை ஆசிரியர் ராஜேந்திர தவடியின் சமயோசித முடிவால் பள்ளிக்கு வந்திருந்த 900 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலை வெள்ள அபாயத்தை உணர்ந்த அவர், பேருந்து ஓட்டுநர்களைத் தொடர்பு கொண்டு மாணவர்களைத் திருப்பி அனுப்பியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த பெருவெள்ளத்தில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பள்ளி கட்டடம் அடித்துச் செல்லப்பட்டதால் 19,000 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.