இணையத்தில் வைரலான ஆன்லைன் கச்சேரியில் ஹிஜாப் அணியாமல் பாடிய பிரபல பாடகி பரஸ்தூ அஹ்மதிக்கு ஈரானின் Qom நகர மேல்முறையீட்டு நீதிமன்றம் 74 கசையடி தண்டனையை உறுதி செய்துள்ளது.
பொது ஒழுக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி அவருக்கு இந்தத் தண்டனையுடன் இரண்டு ஆண்டுகள் வெளிநாடு செல்லவும் கலைத்துறையில் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்தத் தீர்ப்புக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.