
டென்மார்க் மன்னர் பிரெடெரிக் எக்ஸ்-ன் மகளான 19 வயது இளவரசி இசபெல்லா, ஸ்லாகல்ஸ் நகரில் உள்ள ஆண்ட்வோர்ஸ்கோவ் பீரங்கி படைத் தளத்தில் தனது 11 மாத கட்டாய ராணுவ சேவையைத் தொடங்கினார்.
அரச குடும்பத்தில் கட்டாய ராணுவ பணியில் ஈடுபடும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ள இவர், எந்தவொரு ஊதியமும் இன்றி இந்தப் பணியைச் செய்ய முடிவெடுத்துள்ளார்.
இவரது சகோதரரான பட்டத்து இளவரசர் கிறிஸ்டியன் ஏற்கனவே இதே முகாமில் பயிற்சியை முடித்துவிட்டு, தற்போது இரண்டாம் லெப்டினன்ட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.