
அமெரிக்காவின் டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய 3 மாகாணங்களில் ஒரே நாளில் 3 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை பெற்ற அந்தோணி டேரல் (66), கார்லோஸ் (70) மற்றும் ஜெரமி வில்லியம்ஸ் (42) ஆகியோருக்கு விஷ ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
அமெரிக்காவில் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதிக்குப் பிறகு, சுமார் 16 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறையாகும்.