
சமூக வலைதளங்களில் தனிநபர்களை, குறிப்பா பெண்களைத் தரம் தாழ்த்தி விமர்சிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நடிகை ராதிகா வலியுறுத்தியுள்ளார்.
திரைத்துறை பிரபலங்கள் மற்றும் கலைஞர்களை அவதூறாகப் பேசுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் அரசும் உடனடியாகத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.