
தென் கொரியாவில் நடக்கும் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா முதல் முறையாக முன்னேறியுள்ளார்.
அரையிறுதிப் போட்டியில் அஷ்மிதா 21-13, 16-21, 21-13 என்ற செட் கணக்கில் ரக்ஷிதா ஸ்ரீயை 48 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு வீழ்த்தி வெற்றி பெற்றார்.
உலகின் 50-வது இடத்திலுள்ள அஷ்மிதா, இறுதிப்போட்டியில் தரவரிசையில் 35-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹான் கியான்சியை எதிர்கொள்கிறார்.