
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியின் இரண்டாவது அரை இறுதியில் இந்தியாவும் தென்கொரியாவும் மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
கடைசி லீக் ஆட்டத்தில் 8-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியிருந்ததால் இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.