
வட கொரிய ராணுவம் நாட்டின் கிழக்குக் கடற்பரப்பில் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட இரண்டு வகையான குரூயிஸ் ஏவுகணைகளைச் சோதனை செய்துள்ளது.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆயுதங்களை அணு ஆயுதங்களுடன் இணைத்து ஆயுதமயமாக்க முடியும் என்று வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் நீருக்கடியில் உள்ள போர் அமைப்புகளின் தயார்நிலையை மதிப்பிடுவதையும், அணு ஆயுத தடுப்பின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.