
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 34 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சுரங்கத்தில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் 10-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.