
மலேசியாவின் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் (66), பதவியில் இருந்தபோது அதிகாரத்தைப் பயன்படுத்தி ரூ.380 கோடி மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில், அவரிடம் ரூ.34.84 கோடி ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ரூ.71.10 லட்சம் பிணையில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த விசாரணை செப்டம்பர் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.